கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : கவின் சாரலன் |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
| பார்த்தவர்கள் | : 32703 |
| புள்ளி | : 19851 |
அடர்ந்த கருங்கூந்தல் அவ்வான் முகிலோ
சுடர்மிகு கண்கள் சுழலும் கயலோ
கடைவிழி காதலின் ஏவு கணையோ
நடைதளர்ந்த தேன்நாண மோ
அடர்ந்த கருங்கூந்தல் அவ்வான் முகிலோ
சுடர்மிகு கண்கள் சுழலும் கயலோ
கடைவிழி காதலின் ஏவு கணையோ
நடைதளர்ந்த தேன்நாண மோ
தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்துப்பா பாடிட
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்
----இன்னிசை
தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்திட -- பண்ரசிக்க
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்
----நேரிசை
தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்துப்பா பாடிட
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்
----இன்னிசை
தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்திட -- பண்ரசிக்க
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்
----நேரிசை
மானோ டுறவுகொண்ட நீலவிழித் தேவதைஎன்
பேனா முனைஉந்தன் புன்னகை யின்அடிமை
தேனிதழ் சிந்தும் தமிழை ரசித்திடுவேன்
மானேநீ ஓர்வான் நிலவு
மானோ டுறவுகொண்ட நீலவிழித் தேவதைஎன்
பேனா முனைஉந்தன் புன்னகை யின்அடிமை
தேனிதழ் சிந்தும் தமிழை ரசித்திடுவேன்
மானேநீ ஓர்வான் நிலவு
வாய் மூடத் தெரியாத
கார்காலத்துதவளை .மனைவி.இளையகவி
கற்றலின் தரத்தை
கண்டறியும்
கடை ஆயுதம்.
தேர்வு.
இளையகவி
பேர்புகழ் எல்லாமும் பெற்றிட வேண்டும்நான்
ஊர்உலகம் என்னை உயர்த்தியே பேசவேண்டும்
கார்பங் களாவுடன் கைநிறையக் காசுவேண்டும்
நேர்வழி யில்சென்றே நான்அடைய வேண்டுமிதை
பார்ஓர்நாள் காட்டுவேன்நான் பெற்று
பேர்புகழ் எல்லாமும் பெற்றிட வேண்டும்நான்
ஊர்உலகம் என்னை உயர்த்தியே பேசவேண்டும்
கார்பங் களாவுடன் கைநிறையக் காசுவேண்டும்
நேர்வழி யில்சென்றே நான்அடைய வேண்டுமிதை
பார்ஓர்நாள் காட்டுவேன்நான் பெற்று
1. கவிஞன் என்பவன் யார்?
2. கவிதை என்பது எது?
3. கவிதையின் பிரிவுகள் யாது?
4. எக்கவிதை வாசகர் உள்ளதை கவர்ந்திருக்கும்?
1.கனவுகள் ஏன் வருகிறது ?
2.பகல் கனவு பலிக்காது என்பார்கள்
3.அப்படியானால் இரவுக் கனவு பலிக்குமா
4.கனவில் ஓட முடிவதில்லை ஏன் ?
5.கனவுகள் கருப்பு வெள்ளையிலா
அல்லது கலரில் வருகிறதா உங்களுக்கு
6.கனவு பற்றி மேற்கு கிழக்கு புத்தகங்கள்
என்ன சொல்கிறது ?